சுவாமி ஐயப்பனின் கட்டியம் - சரண கோஷங்கள்
- thangavelusuresh
- Nov 18, 2025
- 10 min read

ஐயன் ஸ்தோத்திரப் பிரியன் என்பதை உணர்த்தும் நாமாவளி "ஓம் ஸ்தவ ரஸாய நம :". எண்ணிலடங்கா ஸ்தோத்திரங்களை கொண்டவர் நம் ஸ்ரீ தர்ம சாஸ்தா. அவரின் புகழ் பாடும் ஸ்தோத்திரங்களை நாம் துதிக்கும் போது ரசித்து கேட்டு இன்புற்று நமக்கு அருள் பாலிக்கிறார்
கட்டியம் என்பது தெய்வங்கள், தேவர்கள், அறம் சார்ந்தோர், மன்னர்கள் போன்றவர்களின் வருகையை, புகழை எடுத்து (கட்டி சேர்த்து) உரைப்பதாகும். கட்டு + இயம் என பிரித்து பொருள் கொண்டால் எளிதில் விளங்கும். புகழ்ச்சி மொழியில் வருவது கட்டியம்.
கம்பங்குடி பிரம்மஸ்ரீ மீனாக்ஷி சுந்தரமய்யர், சபரிமலை செல்லும் வழியில் உள்ள அப்பாச்சி மேட்டில், சுவாமியின் வருகையை, புகழை விளக்க உபதேசம் செய்த ஸ்ரீதர்ம சாஸ்தா கூட்டுச் சரண கோஷ மாலை. இவர் முதன்முதலில் சொல்லியது 40 சரண கோஷங்கள். அதன் பிறகு 42 ஐ சேர்த்து 82 சரண கோஷங்களை சுவாமிக்கு அர்ப்பணித்தார். 83 முதல் 108 வரை உள்ள சரண கோஷங்கள் மும்பை பாலசுப்ரமணிய ஐயர் எழுதி வரி மற்றும் ஒலி வடிவத்தில் வழங்கினார். இவைகளை நாம் தொகுத்து அவர்களின் ஒப்புதலோடு இங்கே பதிவு செய்கிறோம்.
இதனை தொகுக்க உதவிய ஆன்மிக எழுத்தாளர் ஸ்ரீ சாஸ்தா கோபால் அவர்களுக்கும், இதனை 108 சரண கோஷமாக வடிவமைத்த மும்பை பலசுப்ரமணிய ஐயருக்கும் எங்கள் குழுவின் மனமார்ந்த நன்றி.
109 முதல் 125 வரை உள்ள சரண கோஷங்கள் வில்லிவாக்கம் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா அவர்களாலும், சில பக்த சமாஜம் வெளியிட்ட நூல்களில் இருந்தும் எடுக்கப்பட்டது.
126 மற்றும் 127 இரண்டும் எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ சாஸ்தா கோபால் அவர்கள் இயற்றியதாகும்
1. உக்ரப்ரதாப , வ்யாக்ராதிரூட ,
க்ஷிரப்ரஸாதி பகவான்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
2. என்குல தெய்வமாம் , வன்புலி வாகனன்
பம்பையில் ப்ரஸன்னன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
3. ஸ்ரீ தர்ம சாஸ்தா, மணிகண்ட பூஷிதன்
விஸ்வைக ஸத்பிதா
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
4. பூதகண ஸேவிதன், புவனஜன பூஜிதன்
சபரிகிரி ஆஸ்ரிதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
5. நீலாம்பரதரன், ஸ்ரீ லலிதாஸுதன்,
வேலாயுத ஸோதரன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
6. ஹரிஹர தனயன், ஸுரவர பூஜிதன்
கரிகுக ஸோதரன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
7. கார்த்திகேய அனுஜன், ஆர்த்தி விநாஷக தெய்வம்
மூர்த்தித்ரய வந்திதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
8. உத்திர நக்ஷத்திர ஜாதன் , சித்ர மோஹன ரூபன்
அத்ரியாதி முனி பூஜிதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
9. க்ருஷ்ண வர்ணன், விஷ்ணு ஸுதன்
த்ருஷ்ணாதீதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
10. மோஹினி சுதன் , மோஹன ரூபன்,
ஊஹாதீதனே பாஹிமாம் பாஹிமாம்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
11. பந்தள பூபாலன் , கருணா வருணாலயன்
அலஸையில் விலஸன் ஈசன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
12. க்ஷுரிகாயுத தரன், கரிவாஹன (ஹரிவாஹன) ஸ்திதன்
கரிமாமலை நிலையன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
13. கானகவாஸ ப்ரியன் , காணவேண்டும் நிலவையனே
ஆந்ய வஸ்யன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
14. காந்தமலை வாஸன் , சாந்த கம்பீரன்
சாந்தி ஸுக தாயகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
15. கீர்த்திப்ரசண்ட பானு , வாஞ்சித காமதேனு , ஸோமசேகர ஸுனு, ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
16. நித்ய பிரம்மச்சாரி , நீலாம்பரதாரி, காம்ய வன சஞ்சாரி,
தூர்த்த குல குடாரி
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
17. ஹ்ரீம்கார நாதமய , பூங்காவின் மத்யமதில்
ஓம்காரரூபி பகவான் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
18. உள்கொண்ட பக்தியுடன், உடல் கொண்டு அடுக்கின்ற விறை கொண்ட பக்தஜனங்கள் வேண்டும் சப்தமது சொல்கொண்ட மணிகண்ட தேவன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
19. கரடி, கிடி கடுவாய், காட்டானை போத்துகள், அடவி தடம் ஆஸகலம் ,தவிடு பொடியாகையில், உடன் உதிக்கும் பீதியால் துடதுடே விளிக்கணம் , வடவிடபி மூடியே கடகமணி காஞ்சி மகுடம், இவையொடு விலஸும் ஒரு பகவான் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
20. நிலவய்யா, வனசாரி, மணிகண்ட கிரிவாஸா கவிஹாரன் ஹரி ஸுனு ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
21. அகிலாண்ட கோடி, பிரமாண்ட நாயகா, தீனதயாளா , பக்தவஸ்ஸலா , பாகவத ப்ரிய கருணா கடாட்ச வீக்ஷணன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
22. பாண்டி மலையாளம் , காசி ராமேஸ்வரம் அடக்கியாளும்
ஸ்ரீ பூர்ணா புஷ்கலா ஸமேத ஸ்ரீ ஹரிஹர புத்ரன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
23. வில்லாளி வீரன், வீரமணிகண்டண், ஸ்ரீசபரிகிரி வாஸன்
ஸ்ரீ பூத நாதன் ஹரிஹர சுதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
24. ஸமஸ்தாபராத ரக்ஷகன், ஸர்வா பீஷ்ட தாயகன்
ஸர்வமங்கள் ஸ்வரூபன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
25. கரந்தையர் பாளையத்து உறைவோன், கருணாஸாகரக் கடவுள்
என் கருத்தினில் வந்துதிக்கும்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
26. அநாத ரக்ஷகன், அம்பிகாபதி பாலன்,
அம்மையப்பனின் புதல்வன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
27. ஆபத் பாந்தவன், அன்னதான ப்ரபுஅம்பிகா ஸுதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
28. கருணையங்கடல் , கம்பங்குடிக்குடைய கண்கண்ட தெய்வம்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
29. ஸத்யஸ்வரூபன், ஸச்சிதானந்த மூர்த்தி
ஸத்குருநாதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
30. ஸனகாதி பூஜிதன், ஸகல லோக ரக்ஷகன்
ஸர்வ ஸம்பத் ப்ரதாயகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
31. ப்ரணவ ஸ்வரூபன், பரப்ரம்ம மூர்த்தி
பரமேஸ்வர புத்ரன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
32. ஓம்காரப் பொருள், ஒப்பிலா மணி
ஓரார் நாசகன்,
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
33. ஸகலகலா வல்லவன், ஸந்ததி தாயகன்
சங்கரன் புதல்வன்.
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
34. தயாசிந்து, தீனபந்து
ஞான பிந்து என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
35. பஞ்சகிரி நாதன் பிஞ்ஜசேகரன்
பஞ்சரத்ன பூஷணன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
36. வேதஸ்வரூபன், வேதாந்த அதீதன்
வேலாயுத அனுஜன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
37. ஸர்வரோக நிவாரணன் , ஸர்வ ஸௌக்ய தாயகன்
ஸர்வ ரிபு நாசகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
38. குலத்தை வளர்ப்பவன், குல தெய்வமானவன்
குளத்தூர் பாலன் என்
ஐயன், ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
39. அம்பலவாணன் , அம்பிகாபதி பாலன்
அம்புவியின் நாதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
40. எந்தையே! உன்னை ஸந்ததம் பணிந்தோம்
எங்களை ஆண்டிடும்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
41. சிவனார் மைந்தனே , சைவ துரந்தரனே
ஷம்புவின் பாலன் என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
42. சுப்ர பேதனே , ஸுரஸேனாபதி சோதரனே
சகுன ப்ரம்மம் என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
43. வக்ரதுண்டன் சோதரனே , விக்னேஷ்வரன் தம்பியே
வரத அபயகர மூர்த்தி என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
44. சண்ட பிரசன்டனே , உத்தண்ட மூர்த்தியே
சாஸ்த்ர அதிதேவன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
45. தாமோதரன் மருகனே , தாபம் தீர்ப்பவனே
தருணத்தில் அருள்பவன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
46. பராத்பரன் , பாப பஞ்சனன்
பராத்ம சொரூபன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
47. துஷ்ட நிக்ரஹனே , சிஷ்ட ரக்ஷகனே
சரணாகத பாலகனே
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
48. சிவபுத்ரனே , செல்வநாயகனே
சிவக்ஞான போதன் என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
49. கல்யாண பலதாயகனே , கருணாரச சாகரனே
கைலாச வாச நிலயன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
50. பார்வதி தனையனே , பரம ஐஸ்வர்ய தாயகனே
பரப்ரம்ம சொரூபன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
51. ஹரிஹர ஆத்மஜனே , ஹம்சா ரூட ஸேவிதனே
ஹரிப்ரியன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
52. சாது பூஜிதனே , ஜிதேந்திரியனே
ஜோதி ஸ்வரூபன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
53. துஷ்ட நாசகனே , சிஷ்ட பாலகனே
அஷ்ட மூர்த்தி ப்ரியன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
54. நிராகாரனே , நிர்விகாரனே
நிராமயன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
55. சாது வந்திதனே , சர்வ ஆகம சொரூபனே
சனகாதிமுனி ஸ்துத்யன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
56. சுப்ரஸன்ன மூர்த்தியே , சுஷீலரூபனே
சுப்ரமணிய அனுஜன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
57. தேஜோரூபனே , தேவர்க்கு அருளியவனே
தேவி பாலகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
58. காமதேவனே , கலாதரனே
காலதேவன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
59. மஹாபாஹனே , மங்கை பாலனே
மங்கல ப்ரதாயகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
60. கனக பூஷணனே , சரணாகத போஷகனே
சத்குண நாயகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
61. மஹாவீரனே , மஹாசூரனே
மஹா ரெளத்ரன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
62. துரககரி வாகனனே , துக்க பஞ்சனனே
துஸ்வப்ப நாசனன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
63. ஷக்தி சூலாதரனே , ஷக்தி புத்ரனே
சஸ்த்ர வித்யா விஷாரதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
64. சுப்ர தாயகனே , த்ருடவிரத தாயகனே
த்ருட பலமூர்த்தி
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
65. வேத தத்வக்ஞனே , வேதாந்த ஞானகுருவே
வித்யா விபூஷணன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
66. பந்து விமோசகனே , வந்தித தெய்வமே
சந்தான தாயகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
67. சத்ய சந்தனே , சத்ய சங்கல்பனே
சர்வக்ஞ தெய்வம்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
68. பந்து ப்ரியனே , பந்த விமுக்தனே
பிரஷாந்த ரூபன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
69. சுரேந்திர வந்திதனே , சைவசிந்தாந்த ரூபனே
சச்சிதானந்த மூர்த்தி
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
70. செந்தாமரையாள் பாலனே , செந்தில் ஆண்டவன் சோதரனே
நின் திருவடியே சரணம்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
71. அகரமானவனே , ஆதி ரூபனே
ஆசை தவிர்ப்பவன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
72. இமயவள் பாலகனே , இன்னருள் புரிபவனே
ஈசனார் புதல்வன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
73. உலகின் நாதனே , உற்றார் நெஞ்சனே
உள் அகம் தருபவன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
74. சாந்த ஸ்வரூபனே , காந்தமலை ஜோதியே
கல்மஷ நாசகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
75. சந்தனாபிஷேக பிரியனே , சுந்தராங்க சோபிதனே
சாந்தி அருளும் ஈசன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
76. தத்வ போதகனே , தாப நாசகனே
தபஸ்விகள் போற்றும் என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
77. யக்ன புருஷனே , நித்ய நிர்மலனே
ஏழை பங்காளன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
78. வித்யா அவித்யா சொரூபனே , விவித ஆகம வேதியனே
விஷ்வ வந்த்யன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
79. சாஸ்வத தெய்வமே , ஷம்பு குமாரனே
சபரிகிரிவாசன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
80. சிம்ஹா ரூடனே , ஸுராஸுர வந்த்யனே
சுந்தரன் ஸ்துதிக்கும் என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
81. சுராதி ஸேவ்யனே , சுமுக ஷோபிதனே
சுதன் சுந்தரன் போற்றும் என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
82. சுந்தரன் புகழ்ந்தே , சந்ததம் பணிந்தேன்
எந்தனை ஆண்டிடும்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
83. பஞ்சாச்சர ப்ரியன் , விரிஞ்சாதி பூஜிதன்
பரஞ்சோதி ரூப பகவான்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
84. எருமேலிவாசா , க்ராதரூபா
உத்தண்ட சாஸ்தா என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
85. பக்தபாப வித்வம்சகன் , கர்ம பாச மோசகன்
இந்த பாஷண்டிக்கும் அருளும்
பரம தயாளனான சாந்தஸ்வரூபன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
86. சனிபாதா விநாசகனே , கோரசந்தாப ஹாரகனே
ஸத்கதி அருளும் ஈசன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
87. சர்வ தாயகனே , ஈஷனாத்ரய நாசகனே
குதந்தர சம்ஹாரகன் என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
88. அச்சனார் கோயில் அரசனே , பூர்ணா புஷ்கலா காந்தனே
நஞ்சை அமுதாய் உண்ட ஹரனார் மகன் என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
89. வையமும் வானும் வாழ , மறைமுதல் தர்மம் வாழ
தென்கரண்தாபுரியில் ரக்ஷை புரியும் ஈசன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
90. யோகிரூபனே , கங்காதரன் மைந்தனே
சின்முத்திரை தரித்த ஆனந்த சித்தன் என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
91. சிவகாமிநேசன் மகனே , திருச்சிற்றம்பலத்தில் உறைவோனே
எங்களை ஆண்டருளும் தெய்வம்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
92. சாஸ்தாம்கோட்டை அதிபனே , ப்ரபா சத்யக சமேதனே
ஸ்ரீராம வந்திதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
93. நாகாபரணன் ஆத்மஜனே , நர்த்தன ப்ரியனே
ஆர்த்தி தீர்த்தருளும் ஈசன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
94. நாகஷயனன் ஆத்மஜனே, நானா ரூபதரனே
நம்பினோரை காக்கும் ஈசன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
95. எங்கும் நிறைந்தோனே, எல்லோருக்கும் அருள் புரிபவனே
ஏட்டுமானுரப்பன் மகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
96. அஷ்டாபிஷேக ப்ரியனே, அஷ்டகர்ம நிபுணனே
அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
97. சபரிமலை நாதனே, சரணகோஷ ப்ரியனே
சஞ்சலம் தீர்ப்பவன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
98. ஆதி அந்தம் இல்லாத இறைவனே, மறைகள் தேடும் சத்யசுடரே
சுத்த ப்ரம்ம சொரூபன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
99. தாயின் குறை தீர்த்தவனே, தரணி போற்றும் பாலனே
தத்வ பொருள்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
100. சகல வேத சாரணே , சகல யோக சித்தனே
சம்சார தாரக பர ப்ரம்மம்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
101. காந்தகிரி வாசனே , கலிதீர்க்கும் தெய்வமே
கண்கண்ட கடவுள்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
102. ஆதிசக்தி மகனே , ஆரியங்காவு அரசனே
புருஷார்த்த தாயகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
103. ஸர்வதுரித நிவாரணனே , சர்வசுக ப்ரதாயகனே
சர்வ குண அதீதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
104. ரமேஷ உமேஷ ஆத்மஜனே, சோமாரண்ய வாசனே
கோப்த்ரு நாம தேயன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
105. ஸ்ரீ பாந்தவ சிஞ்சிதனே , சர்வாரிஷ்ட நிவாரகனே
சர்வ வந்த்யன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
106. சாபபாண தரித்தவனே , சர்வ சத்ரு விநாசகனே
ஆஹேத்த ப்ரியன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
107. யக்ஷ கின்னர கந்தர்வ சித்த நர மிருக சேவிதன்
பன்னக தேவாசுர ஸமஸ்த பூதகண வந்திதன்
கணபதி சமேத பொன்னம்பல வாசன் என்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
108. ஆயிரம் கோடி சூரியன் போல் பிரகாசிக்கும் பரதேவனை காண
இருமுடி சுமந்து பெருவழி நடந்து வரும்
இந்த பாவியின் இன்னல்களை தீர்த்து
எப்பிழையை செய்யினும் அப்பிழைகளைப் பொறுத்து
உபரிநிதி பெருக செய்யும் கருணாரவிந்த பாதங்களில்
அடைக்கலம் தந்து சரணாகதி அடைவோருக்கு
தன்னையே தந்து காத்து இரட்ச்சிக்கும்
ஒரேயொரு பகவான் என் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
109. பார்புகழும் சபரிமலை , பதினெட்டும் கடந்த நிலை
ஸ்ரீ சக்ர பீடமதில் சின்மயானந்த பாலன்
மகரம் சூழ் நன்னாளில் , யோகியாய்......ஜோதியாய்....
இரண்டென காட்சி தந்து , இருவினை களையும் போது
உருகிவரும் அடியவர்கள் சரணங்கள் விளிக்கும் போது
தருணமாய் வந்து காக்கும் என் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
110. சபரிபீடாதிபதி, உபரி ஸந்தான தாயகன், ஸகல புவன பூஜிதன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
111. ஆனைமுக ஸோதரன், ஆரியங்காவில் ஐயன், ஆக்ஞாபீடவாசி
என் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
112. ஸனகாதி பூஜிதன், அணிமாதி ஸித்தன், சுரிகாயுததரன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
113. பஞ்சகிரிவாஸனே பஞ்சகவ்ய அபிஷேகனே
பஞ்சபாண விதூரனே பாஹிமாம் பாஹிமாம்
என் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
114. நீலாம்பரதாரி நித்ய ப்ரம்மச்சாரி
பம்பா தீரவிஹாரி
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
115. ஓம்கார பொருள் ஓதுமறையான மணி
ஹ்ரீங்கார மந்த்ர ஸ்வரூபி பகவான்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
116. தஞ்சமெம்பார் மனசஞ்சலம் தீர்த்தருளும்
வஞ்சிமலை மகராஜன் மிஞ்சு புகழ் குளத்தூரான்
நஞ்சுண்டார் வரமகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
117. சாத்திரங்கள் புகழும் ஸ்தோத்திர கடல்
சங்கடம் போக்கும் சபரிகிரீசன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
118. பக்த பஜனையில் மகிழ்ந்து , பரவசம் காட்டி
பக்கம் இருந்து காக்கும் பந்தளத்து பாலகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
119. சைவ தர்மம் காக்கும் சிவஞான யோகி
ஜெகம் போற்றும் ரக்ஷகன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
120. முத்திரைகொண்டு தத்துவம் உணர்த்தும்
முக்கண்ணன் மைந்தன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
121. ஏழிசை நாதன், ஏகாந்த மலை வாசன்
ஏழைப்பங்காளன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
122. அம்புஜ மலர்ப்பாதன் , பங்கஜதளநேத்ரன்
உம்பர்கள் துதிநேசன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
123. குண்டலாபரணணே குலவிருத்தி காரணனே
மண்டலாபிஷேகம்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
124. மிண்டர் குலகாலன் உத்தண்ட கோதண்டன்
சண்ட பிரசண்ட வீரமணிகண்டன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
125. தந்தையே உந்தனை சந்ததம் பணிந்தோம்
எங்களை ஆண்டிடும்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
126. இருமுடி சுமப்போரின் இதய பாரம் நீக்குபவனே
இப்புவியில் கண்கண்ட தெய்வமே
இக-பர சுகம் அருளும்
ஈடில்லா பரம்பொருள்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
127. நெய்யபிஷேகப் பிரியனே
நேசமுடன் பாசம் காட்டுபவனே
நேத்திர சுந்தரனே
நினைத்தவரம் தருபவன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே
சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!!
தேவ தேவோத்தம தேவதா ஸர்வ பௌம அகிலாண்ட கோடி ப்ரம்மாண்ட நாயக ஸ்ரீ பூர்ணா புஷ்கலா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஸ்வாமி ஹெச்சரிகா... பராக் ... பராக் ...பராக்…

Comments