top of page

ஐயனின் ஆயிரம் நாமாவளிகள் - தமிழில்

1.   ஓம் ஈசனின் புதல்வா போற்றி 
2.   ஓம் பேரொளிப் பிழம்பே போற்றி
3.   ஓம் ஈசன் செயலை ஏற்பாய் போற்றி 
4.   ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி 
5.   ஓம் சீர் பெறு ஞானியே போற்றி
6.   ஓம் சைவ சித்தாந்தம் காப்பாய் போற்றி 
7.   ஓம் சங்கம் வைத்திருப்பாய் போற்றி 
8.   ஓம் தேவர் தம் தலைவா போற்றி 
9.   ஓம் சிவப்பரம் பொருளே போற்றி 
10.  ஓம் தேவர்க்கும் மேலானாய் போற்றி
11.  ஓம் மாரனின் தலைவா போற்றி 
12.  ஓம் மன்மதனை வென்றாய் போற்றி 
13.  ஓம் வேண்டும் பலனைத் தருவாய் போற்றி 
14.  ஓம் மங்கள கரனே போற்றி 
15.  ஓம் எழில் மிகு மேனியாய் போற்றி
16.  ஓம் மங்களப் பலனைத் தருவாய் போற்றி 
17.  ஓம் கருணைக் கடலானாய் போற்றி 
18.  ஓம் அனைத்துச் செயல்களுக்கும் முதல்வா போற்றி 
19.  ஓம் கருணை ரசங்களைக் கொண்ட கடலே போற்றி 
20.  ஓம் உலகத்தின் மகிழ்ச்சியானாய்  போற்றி
21.  ஓம் உலகைக் காப்பவனே போற்றி 
22.  ஓம் உலகிற்கு ஆனந்தம் நல்குவாய் போற்றி 
23.  ஓம் வெற்றி முதல் ஆற்றல் அருள்வாய் போற்றி 
24.  ஓம் மக்களை மகிழ்விப்பாய்  போற்றி 
25.  ஓம் வெற்றியை விரும்புவாய் போற்றி

26.  ஓம் புலன்களை வென்றாய் போற்றி 
27.  ஓம் மனவிகாரங்களை மாற்றுவாய் போற்றி 
28.  ஓம் தேவரை வென்றாய் போற்றி 
29.  ஓம் ஜைமினி போன்ற முனிவர்களால் பூஜித்தாய் போற்றி 
30.  ஓம் மரணத்தை அழித்தாய் போற்றி
31.  ஓம் ஜனார்தனின் புதல்வா  போற்றி 
32.  ஓம் முதல்வனே போற்றி 
33.  ஓம் பெரியோர் பலரால் வணங்கப்படுவாய் போற்றி 
34.  ஓம் பிறப்பில்லாதவனே போற்றி 
35.  ஓம் ஆசையை அழிப்பவனே போற்றி
36.  ஓம் ஜனகர் பூஜையை ஏற்றாய் போற்றி 
37.  ஓம் ஒப்பற்ற வேள்வியே போற்றி
38.  ஓம் உயிர்களின் தலைவனே போற்றி 
39.  ஓம் நான்முகன் பூஜிப்பவனே போற்றி 
40.  ஓம் உடற்பிறவி அழிப்பாய் போற்றி
41.  ஓம் உடலைக் காப்பாய் போற்றி 
42.  ஓம் பெருநிதி அளிப்பாய் போற்றி 
43.  ஓம் வாயு முதல் தேவரால் வழிபடுவாய் போற்றி 
44.  ஓம் பஞ்ச பூதங்கள் ஆனாய் போற்றி 
45.  ஓம் உமையின் மைந்தனே போற்றி
46.  ஓம் தத்துவ வடிவே போற்றி 
47.  ஓம் பேரின்பம் அளிப்பாய் போற்றி 
48.  ஓம் எப்பொருட்கும் மேலாய் போற்றி 
49.  ஓம் வேதமும், வேள்வியும் ஆனாய் போற்றி 
50.  ஓம் ஞானம் நல்குவாய் போற்றி

51.  ஓம் நன்மை தீமை உணர்விப்பாய் போற்றி 
52.  ஓம் அறிவின் அதிபதியே போற்றி 
53.  ஓம் குணச்செல்வமே போற்றி 
54.  ஓம் கோபாலனை வழிபடுவாய் போற்றி 
55.  ஓம் பசுக்களைக் காப்பாய் போற்றி
56.  ஓம் கோகுலனே போற்றி 
57.  ஓம் யானை வாகனனே போற்றி 
58.  ஓம் யானைக்கு அன்பானவனே போற்றி 
59.  ஓம் யானைக் கழுத்துடையாய் போற்றி 
60.  ஓம் யானை ஒத்த தோளினாய் போற்றி
61.  ஓம் சூரியனே போற்றி 
62.  ஓம் பசுவின் நாயகனே போற்றி 
63.  ஓம் ஒளியே போற்றி 
64.  ஓம் கிராமம் காப்பாய் போற்றி 
65.  ஓம் திசையானைத் தலைவா போற்றி
66.  ஓம் திசையானைகளால் பூஜித்தாய் போற்றி 
67.  ஓம் பூதகணங்களின் நாயகா போற்றி
68.  ஓம் விநாயகனே போற்றி 
69.  ஓம் பசுக்களின் நாயகா போற்றி 
70.  ஓம் பகலவனே போற்றி
71.  ஓம் சடைமுடி தரித்தாய் போற்றி 
72.  ஓம் நீரின் தண்மை ஆனாய் போற்றி 
73.  ஓம் ஜைமுனியால் பூஜிக்கப் படுவாய் போற்றி 
74.  ஓம் ஜலந்தரனை அழித்தாய் போற்றி 
75.  ஓம் சிவந்த கண்களை உடையாய் போற்றி

76.  ஓம் செவ்வாடை உடுப்பாய் போற்றி 
77.  ஓம் தேவர்களின் தலைவா போற்றி 
78.  ஓம் துன்பம் துடைப்பாய் போற்றி 
79.  ஓம் மங்கலம் தந்து மகிழ்விப்பாய் போற்றி 
80.  ஓம் பகலவனின் ஒளி ஆனாய் போற்றி
81.  ஓம் தேவர்களின் பூஜை பெற்றாய் போற்றி 
82.  ஓம் தேவர்களால் வணங்குபவனே போற்றி 
83.  ஓம் சிவந்த உடலாய் போற்றி 
84.  ஓம் சால்மினி தீவின் தலைவா போற்றி 
85.  ஓம் நல்லொளியாய் போற்றி
86.  ஓம் வில் வித்தையில் வீரனே போற்றி 
87.  ஓம் இலையுதிர் கால நிலவே போற்றி 
88.  ஓம் சனகாதி முனிவரால் தியானிக்கப்படுவாய் போற்றி 
89.  ஓம் எல்லா அறிவையும் அளிப்பாய் போற்றி 
90.  ஓம் பிரபுவே போற்றி
91.  ஓம் கலப்பை ஆயுதம் கொண்டாய் போற்றி 
92.  ஓம் அன்னத்தின் அழகை உடையாய் போற்றி 
93.  ஓம் ஹா ஹா ஹு ஹு எனத் துதிக்கப்படுபவனே போற்றி 
94.  ஓம் திருமாலே போற்றி 
95.  ஓம் மகாதேவனே போற்றி
96.  ஓம் உயிர்ச்சக்தியே போற்றி 
97.  ஓம் சிங்காசனம் கொண்டாய் போற்றி 
98.  ஓம் தூய்மையானவனே போற்றி 
99.  ஓம் நெருப்புக்கு ஒப்பானவனே போற்றி 
100. ஓம் பக்தர்களின் பாவத்தை தவிர்ப்பாய் போற்றி

101. ஓம் சாம்பல் வண்ண மேனியாய் போற்றி 

102. ஓம் பயத்தை போக்கியவனே போற்றி 
103. ஓம் ஆதித்தன் அறிவைப் போன்றாய் போற்றி 
104. ஓம் அச்சம் அழிப்பவனே போற்றி 
105. ஓம் மூன்று வித திலகம் உடையாய் போற்றி
106. ஓம் முக்கண்ணா போற்றி 
107. ஓம் மூன்று திலகம் அணிந்த நெற்றியாய் போற்றி 
108. ஓம் முப்புரம் எரித்தாய் போற்றி 
109. ஓம் தேவர்களால் வரம் பெற்றாய் போற்றி 
110. ஓம் தேவர்களின் உள்ளத்தில் உள்ளாய் போற்றி
111. ஓம் தேவ சேனாபதியே போற்றி 
112. ஓம் ஒளிமயமானாய் போற்றி 
113. ஓம் ஒளிக்கு ஒளி ஆனாய் போற்றி 
114. ஓம் பத்து தலைகளை உடையாய் போற்றி 
115. ஓம் கருணை உள்ளம் கொண்டாய் போற்றி
116. ஓம் குற்றம் களைந்து குணமளிப்பாய் போற்றி 
117. ஓம் தோர் தண்டத்தை பெற்றவனே போற்றி 
118. ஓம் தண்டனைத் தரும் தலைவா போற்றி 
119. ஓம் கையில் வில்லை உடையாய் போற்றி 
120. ஓம் புவிக்கு நாயகனே போற்றி
121. ஓம் புவியின் செல்வந்தனே போற்றி
122. ஓம் அறத்தின் மைந்தா போற்றி 
123. ஓம் அறத்தை அறிந்தாய் போற்றி 
124. ஓம் அறவழிக்கு உதவுவாய் போற்றி 
125. ஓம் வில்வித்தையில் வீரனே போற்றி

126. ஓம் விரிவான காதுகள் உடையாய் போற்றி 
127. ஓம் பருத்த உடலினாய் போற்றி 
128. ஓம் அகன்ற கண்களை உடையாய் போற்றி 
129. ஓம் தோள்வலி கொண்டாய் போற்றி 
130. ஓம் சீரிய உடலாய் போற்றி
131. ஓம் கவசத்துடன் காட்சி நல்குவாய் போற்றி 
132. ஓம் விண்மீனாய் விளங்குவாய் போற்றி 
133. ஓம் ஒளி நாயகனாய் உள்ளாய் போற்றி 
134. ஓம் தவத்தோர்க்கு தலைவா போற்றி
135. ஓம் யோகத்திற்கு இருப்பிடம் ஆனாய் போற்றி
136. ஓம் யோகியே  போற்றி 
137. ஓம் யோக நிலையில் இருப்பவனே போற்றி 
138. ஓம் மந்தார மலரின் தோட்டமே போற்றி 
139. ஓம் மதம் கொண்டவனே போற்றி 
140. ஓம் மலையாள நாட்டின் மலையானாய் போற்றி
141. ஓம் கற்பக மலருக்கு ஒப்பானாய் போற்றி 
142. ஓம் மந்தமாருதத்தால் தொண்டு செய்வாய் போற்றி 
143. ஓம் ஒளியின் ஈட்டமே போற்றி 
144. ஓம் அகன்ற மார்பினாய் போற்றி 
145. ஓம் பொன்னால் பூஜிக்கப்படுவாய் போற்றி
146. ஓம் மிகவும் உயர்ந்தாய் போற்றி 
147. ஓம் பெருமையே உடலானாய் போற்றி 
148. ஓம் அகன்ற கண்ணாய் போற்றி 
149. ஓம் அழகான தாடையை உடையாய் போற்றி 
150. ஓம் காற்றுக் கடவுளால் போற்றப்படுவாய் போற்றி

151. ஓம் ஆணாய், பெண்ணாய் ஆனாய் போற்றி 
152. ஓம் காமத்தைக் கலைப்பாய் போற்றி 
153. ஓம் வீடு பேறு விளைவிப்பாய் போற்றி 
154. ஓம் உலகின் ஒளியே போற்றி 
155. ஓம் வேள்வியின் பொருளே போற்றி
156. ஓம் வல்லமை எல்லாம் போற்றி 
157. ஓம் பெருமழை பொழிவாய் போற்றி 
158. ஓம் சொல்லின் வல்லாய் போற்றி 
159. ஓம் தத்துவத்தின் விரிவுரையே போற்றி 
160. ஓம் உலகின் ஒளியே போற்றி
161. ஓம் கதிரவன் போன்ற அறிவே போற்றி 
162. ஓம் மலைமகள் மைந்தா போற்றி 
163. ஓம் மருத்துவனே போற்றி 
164. ஓம் மூச்சுக் காற்றடக்க அருளினாய் போற்றி 
165. ஓம் நீல ஆடை அணிந்தவனே போற்றி
166. ஓம் நீல நிறம் ஆனவனே போற்றி 
167. ஓம் நீல நிறக் கழுத்துடையாய் போற்றி 
168. ஓம் குற்றம் குறை இலாதாய் போற்றி 
169. ஓம் முக்கண்ணனே போற்றி 
170. ஓம் இசை மயம் ஆனாய் போற்றி 
171. ஓம் மணிகள் பல அணிந்தாய் போற்றி 
172. ஓம் மணி ஒளியாய் மலர்வாய் போற்றி 
173. ஓம் திருமகளின் திருமகன் ஆனாய் போற்றி 
174. ஓம் திருமகளால் மகிழ்பவனே போற்றி 
175. ஓம் மன்னனின் மகனே போற்றி

176. ஓம் கொடியவரை போரில் கொன்றாய் போற்றி 
177. ஓம் அலகில் அழகுடையாய் போற்றி 
178. ஓம் ரேணுகாவால் துதிக்கப்படுவாய் போற்றி 
179. ஓம் அரக்கர்களை அழிப்பாய் போற்றி 
180. ஓம் யானை அரசனால் துதிக்கத்தக்கவரே போற்றி
181. ஓம் மூன்று கொம்புடை  அரக்கனை கொன்றாய் போற்றி
182. ஓம் புவியை வீடாய் கொண்டாய் போற்றி 
183. ஓம் பொன்னின் அழகா போற்றி 
184. ஓம் தங்கப் பிரகாரமுடையாய் போற்றி 
185. ஓம் ஹரிகர புத்திரனே போற்றி
186. ஓம் ஆதிப்பரம் பொருளே போற்றி 
187. ஓம் குதிரை முகத்தானே போற்றி 
188. ஓம் எண் திசைத்தலைவா போற்றி 
189. ஓம் மன்னனால் பூஜிக்கப் பெற்றாய் போற்றி 
190. ஓம் குதிரைக்கு பிரியமானவனே போற்றி
191. ஓம் பொன்னும் ஸ்படிகமும் போன்றவனே போற்றி 
192. ஓம் அன்ன வாகனனால் துதிக்கப்படுபவனே போற்றி 
193. ஓம் காடுறைவாய் போற்றி 
194. ஓம் காட்டின் நாயகா போற்றி 
195. ஓம் சிவனே போற்றி
196. ஓம் சிறந்த முகத்தோனே போற்றி 
197. ஓம் எமனின் தலைவா போற்றி 
198. ஓம் நாராயணனே போற்றி 
199. ஓம் எழிலார் தோற்றம் உடையாய் போற்றி 
200. ஓம் விசாலமான சொல்லாளியே போற்றி

201. ஓம் குழல் ஒலி விரும்புவாய் போற்றி 
202. ஓம் அழகார் கழுத்தாய் போற்றி 
203. ஓம் அபயகரத்தால் அருள்வாய் போற்றி 
204. ஓம் புகழ்மயமானாய் போற்றி 
205. ஓம் அகன்ற கழுத்துடையாய் போற்றி
206. ஓம் அகன்ற கண்கள் உடையாய் போற்றி 
207. ஓம் ஆனந்த மயமாய் போற்றி 
208. ஓம் மூங்கில் காட்டில் உறைவாய் போற்றி 
209. ஓம் மலைமகள் கணவன் துதிப்பாய் போற்றி 
210. ஓம் பிரம்பு கை கொண்டாய் போற்றி
211. ஓம் மறைகளின் மூலமே போற்றி 
212. ஓம் எம் குல தெய்வமே போற்றி 
213. ஓம் கண்கவர் மேனியாய் போற்றி 
214. ஓம் 'கிரீம்' என்ற உருவினாய் போற்றி 
215. ஓம் 'கிரீம்' ஒலி மனத்தகத்தாய் போற்றி
216. ஓம் அடியாரை மகிழ்விப்பாய் போற்றி 
217. ஓம் தங்கமய மானாய் போற்றி 
218. ஓம் ஆசைகளை எரிப்பாய் போற்றி 
219. ஓம் வேள்வியில் ஆசை கொண்டாய் போற்றி 
220. ஓம் வேள்வியை முடிப்பாய் போற்றி
221. ஓம் ஹூங்கார ஒலிக்கு காரணமானாய் போற்றி 
222. ஓம் வேள்வி அவியை வைத்திருப்பாய் போற்றி
223. ஓம் வேள்வியை மாலையாய் கொண்டாய் போற்றி 
224. ஓம் பெருநகை உடையாய் போற்றி 
225. ஓம் பாவத்தை அழிப்பாய் போற்றி
226. ஓம் அணு உரு ஆனாய் போற்றி 

227. ஓம் அழகு அளிப்பாய் போற்றி 
228. ஓம் மூப்பில்லானே போற்றி 
229. ஓம் உடலற்ற உருவே போற்றி 
230. ஓம் அதர்வண வேத மந்திரமே போற்றி
231. ஓம் வேள்வித் தீ ஆனாய் போற்றி 
232. ஓம் தங்க ஆடை கொண்டாய் போற்றி 
233. ஓம் மங்களகரமான பார்வை உடையாய் போற்றி 
234. ஓம் தியானத்தில் ஆசை கொண்டாய் போற்றி 
235. ஓம் நீல ஆடை அணிந்தாய் போற்றி
236. ஓம் செல்வம் காப்பாய் போற்றி 
237. ஓம் வெப்பம் போக்குவாய் போற்றி 
238. ஓம் பசு சின்னம் கையில் உடையாய் போற்றி 
239. ஓம் தவத்தில் ஆசை உடையாய் போற்றி 
240. ஓம் தவத்தைக் காப்பாய் போற்றி
241. ஓம் மாசிமாதப் பெயராய் போற்றி 
242. ஓம் மகுடாபிஷேகம் செய்யப்படுபவனே போற்றி 
243. ஓம் புகழும், செல்வமும் ஆனாய் போற்றி 
244. ஓம் மந்திர உருவாய் ஆனாய் போற்றி 
245. ஓம் சிவனே போற்றி
246. ஓம் மந்திரமே போற்றி 
247. ஓம் அறிவில் சிறந்தோய் போற்றி 
248. ஓம் யாகமே போற்றி 
249. ஓம் அடியவர் மனதை கவர் கள்வா போற்றி 
250. ஓம் புதையலே போற்றி

251. ஓம் பெருங்கடலே போற்றி 
252. ஓம் சூரியனே போற்றி 
253. ஓம் அழகுடை முடியாய் போற்றி 
254. ஓம் திங்களைக் காப்பாய் போற்றி 
255. ஓம் சிறந்த மருந்தானாய் போற்றி
256. ஓம் வேதங்கள் கற்றாய் போற்றி 
257. ஓம் மங்கலப் பார்வை உடையாய் போற்றி 
258. ஓம் பரிதியே போற்றி 
259. ஓம் எல்லார்க்கும் ஆசானே போற்றி 
260. ஓம் நிலவு போன்ற அழகு நகை கொண்டாய் போற்றி
261. ஓம் காலமே போற்றி 
262. ஓம் ஆற்றல் மிக்காய் போற்றி 
263. ஓம் நிலவொளியாய் போற்றி 
264. ஓம் சமாதி நிலையில் நின்றாய் போற்றி 
265. ஓம் அழகிய பற்களை உடையாய் போற்றி
266. ஓம் அழகிய கன்னங்களை உடையாய் போற்றி 
267. ஓம் ஆறு நிறங்களில் உடையாய் போற்றி 
268. ஓம் செல்வங்களுக்கு எல்லாம் தலைவா போற்றி 
269. ஓம் பாம்பின் விடம் கொண்டாய் போற்றி 
270. ஓம் இயமனால் போற்றப்படுவாய் போற்றி
271. ஓம் சுவர்க்கத்தின் தலைவா போற்றி 
272. ஓம் கோமுகவனத் தலைவா போற்றி 
273. ஓம் இந்திரனால் போற்றப்படுவாய் போற்றி 
274. ஓம் காலத்தை கணிப்பாய் போற்றி 
275. ஓம் அணுவுக்கு அணுவாய் போற்றி

276. ஓம் கிரௌஞ்ச மலையை பிளந்தாய் போற்றி 
277. ஓம் செயலைச் செய்வாய் போற்றி 
278. ஓம் தயையுடையாய் போற்றி 
279. ஓம் கரளிகரனை அழித்தாய் போற்றி 
280. ஓம் மன்மதன் மமதை மாய்த்தாய் போற்றி
281. ஓம் விரும்பியதைத் தருவாய் போற்றி 
282. ஓம் ஆன்மாவைக் காப்பாய் போற்றி 
283. ஓம் கயிலையில் உறைவாய் போற்றி 
284. ஓம் வரங்களை வழங்குவாய் போற்றி 
285. ஓம் பிரகலாதன் மகனே போற்றி
286. ஓம் கதிரவனே போற்றி 
287. ஓம் பொன்னிறக் குதிரை உடையாய் போற்றி 
288. ஓம் சேனைத் தலைவா போற்றி 
289. ஓம் நாகரத்ன ஆபரணம் அணிந்தாய் போற்றி 
290. ஓம் அழகனே போற்றி
291. ஓம் அழகுமுகம் கொண்டாய் போற்றி 
292. ஓம் தூய்மையானவனே போற்றி 
293. ஓம் நற்சபை நாயகனே போற்றி 
294. ஓம் நற்சபை நடத்துவாய் போற்றி 
295. ஓம் அம்புகளைத் தடுப்பாய் போற்றி
296. ஓம் மேகக் கூட்டமானாய் போற்றி 
297. ஓம் சரணம் அடைந்தவரைக் காப்பாய் போற்றி 
298. ஓம் கூரான பல்லழகா போற்றி 
299. ஓம் நீண்ட நல்நாக்கை உடையாய் போற்றி 
300. ஓம் மென்மையான செங்கணா போற்றி

301. ஓம் தேவயோனியான அக்னியே போற்றி 
302. ஓம் பாகுபாடில்லா பண்பா போற்றி 
303. ஓம் அங்க நாட்டரசே போற்றி 
304. ஓம் போஜ நாடாள்வாயே போற்றி 
305. ஓம் பூமி நாயகனே போற்றி
306. ஓம் கழுகை அழித்தாய் போற்றி 
307. ஓம் நஞ்சைப் போக்குவாய் போற்றி 
308. ஓம் திசை உடல் ஆனாய் போற்றி 
309. ஓம் துன்பம் எரிப்பாய் போற்றி 
310. ஓம் அழகான குழந்தை முகத்தாய் போற்றி
311. ஓம் மேலானவனே போற்றி 
312. ஓம் வினையைக் கெடுப்பவனே போற்றி 
313. ஓம் போர் செய்பவனே போற்றி 
314. ஓம் புன்னகை பூப்பாய்  போற்றி 
315. ஓம் எல்லார்க்கும் மேலானாய் போற்றி
316. ஓம் அன்பர்க்கு இன்பம் அளிப்பாய் போற்றி 
317. ஓம் தாமரையில் அமர்ந்தாய் போற்றி 
318. ஓம் அன்பர் ஆணை ஏற்பாய் போற்றி 
319. ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி 
320. ஓம் பக்தர் சுமை சுமப்பாய் போற்றி
321. ஓம் பைரவ உருவம் கொண்டாய் போற்றி 
322. ஓம் அடியவரை உயர்விப்பாய் போற்றி 
323. ஓம் வாமன அவதாரம் செய்தாய் போற்றி 
324. ஓம் சிங்க முகத்தோனே போற்றி 
325. ஓம் சிங்க உருவத்தாய் போற்றி

326. ஓம் சேனைத்தலைவா போற்றி 
327. ஓம் அழிவற்றவனே போற்றி 
328. ஓம் சித்தர்களின் ஒளியே போற்றி 
329. ஓம் சித்தர் அறத்தைக் காப்பாய் போற்றி 
330. ஓம் சூரியனின் ஒளி உருவே போற்றி
331. ஓம் ஆபத்தை அழிப்பவனே போற்றி 
332. ஓம் அமுதக் கடலை அகமாய் கொண்டாய் போற்றி 
333. ஓம் இளவரசே போற்றி 
334. ஓம் யோகிகளுக்கு வரம் அளிப்பாய் போற்றி 
335. ஓம் வைகரை ஒளியே போற்றி
336. ஓம் விண்மீன் போல் ஒளிர்வாய் போற்றி 
337. ஓம் தேவர்களுக்கெல்லாம் முதற்கடவுளே போற்றி 
338. ஓம் சோதிடனே போற்றி 
339. ஓம் சிவந்த உதடுகளை உடையாய் போற்றி 
340. ஓம் செங்கமலக் கண்ணனே போற்றி
341. ஓம் பொன்னிறக் கண்ணனே போற்றி 
342. ஓம் ஆடுமயில் தோகை அணிந்தாய் போற்றி 
343. ஓம் அரவுமணி அணிந்தாய் போற்றி 
344. ஓம் அரவாபரணனே போற்றி 
345. ஓம் செல்வம் தருவாய் போற்றி
346. ஓம் போக ஆனந்தம் அளிப்பாய் போற்றி 
347. ஓம் அன்பர் அச்சம் அழிப்பாய் போற்றி 
348. ஓம் ஐங்கரனால் பூஜிக்கப்பட்டவனே போற்றி 
349. ஓம் மன்மதனால் பூஜிக்கப்பட்டவனே போற்றி
350. ஓம் உலகில் நிலையாய் இருப்பாய் போற்றி

351. ஓம் எல்லாமும் ஆனாய் போற்றி 
352. ஓம் கையில் கணைகள் கொண்டாய் போற்றி 
353. ஓம் நான்முகனின் உருவத்தை உடையாய் போற்றி 
354. ஓம் நான்மறைப் பொருள் உணர்ந்தாய் போற்றி 
355. ஓம் அரிவாள் ஆயுதம் கொண்டாய் போற்றி
356. ஓம் ஐயிரண்டு தோளினாய் போற்றி 
357. ஓம் தேவ, மனிதர்களை படைத்தோய் போற்றி 
358. ஓம் செல்வங்களின் தலைவா போற்றி 
359. ஓம் அசுரர்களைக் கொன்றவனே போற்றி 
360. ஓம் ஆயிரம் கண்ணுடையாய் போற்றி
361. ஓம் நூற்றைக் கடந்தவனே போற்றி 
362. ஓம் பிரமனே போற்றி 
363. ஓம் அடியாருடன் கலந்து இருப்பவனே போற்றி 
364. ஓம் கருடமலையில் வசிப்பவனே போற்றி 
365. ஓம் கம்பீரமானவனே போற்றி
366. ஓம் சந்தனக் காற்றை சுவாசிப்பாய் போற்றி 
367. ஓம் கணங்களுக்கு நாயகனே போற்றி 
368. ஓம் மூங்கில் காட்டில் வசிப்பாய் போற்றி 
369. ஓம் பூமியில் சிறந்த அறிவானாய் போற்றி 
370. ஓம் கோகுல பரிவாரங்களைக் காப்பாய் போற்றி
371. ஓம் வேத வேதாந்தியே போற்றி 
372. ஓம் பாரிஜாத மரத்தில் உறைவாய் போற்றி 
373. ஓம் சூர்ய, சந்திர வட்டத்தில் இருப்பாய் போற்றி 
374. ஓம் ஆசிரியர்களால் விரும்பப்படுவாய் போற்றி 
375. ஓம் வணக்கத்திற்கு உரியோய் போற்றி

376. ஓம் தானம் - தவம் தருவாய் போற்றி 
377. ஓம் அறிவுறு ஆனாய் போற்றி 
378. ஓம் கையில் புல்லாங்குழல் உடையாய் போற்றி 
379. ஓம் வீணையில் வித்தை விளைப்பாய் போற்றி 
380. ஓம் எல்லாரையும் கவர்ந்திழுப்பாய் போற்றி
381. ஓம் ஹைமில்யனே போற்றி 
382. ஓம் வேள்வியின் பாக்யவானே போற்றி 
383. ஓம் வெப்பம் விளைவிப்பாய் போற்றி 
384. ஓம் வேள்வி ஞானம் பெற்றாய் போற்றி 
385. ஓம் வையக உயிர்க் காற்றானாய் போற்றி
386. ஓம் மணிகண்ட மகத்துவமே போற்றி 
387. ஓம் ஆணவம் அழிப்பாய் போற்றி 
388. ஓம் விழிப்பென்பது இல்லாய் போற்றி 
389. ஓம் காலத்தின் தன்மை அறிந்தாய் போற்றி 
390. ஓம் காலத்தைப் படைக்க காரணமானாய் போற்றி
391. ஓம் குபேரனே போற்றி 
392. ஓம் வீடனின் உருவம் கொண்டாய் போற்றி 
393. ஓம் இலக்குமியை வணங்குவாய் போற்றி 
394. ஓம் மாநிலம் போற்றும் மாவீரனே போற்றி 
395. ஓம் பேச்சறிவை பெற்றவனே போற்றி
396. ஓம் பகலவன் உடனுறை பரமா போற்றி 
397. ஓம் சுஆம்னா நாடியில் தோன்றினாய் போற்றி 
398. ஓம் துறவிப் போல் திரிபவனே போற்றி 
399. ஓம் ஒய்யார ஒளியை உடையாய் போற்றி 
400. ஓம் பெரும் புகழைப் பெற்றாய் போற்றி

401. ஓம் நற்சபை நாயகா போற்றி 
402. ஓம் கல்விக் கரையிலா கடலே போற்றி 
403. ஓம் வரங்களின் வரம்பிலா புதையலே போற்றி 
404. ஓம் மூத்தவனுக்கு முன் மணமுடித்தாய் போற்றி 
405. ஓம் உலகிற்கோர் உதாரணமானாய் போற்றி
406. ஓம் அகிலத்தார் அறியாய் போற்றி 
407. ஓம் மன்மதனை வென்றாய் போற்றி 
408. ஓம் எல்லையில்லா எரிகதிராய் இயங்குவாய் போற்றி
409. ஓம் அலங்காரப் பிரியனே போற்றி 
410. ஓம் நஞ்சைப் பெற்று ஏற்றாய் போற்றி
411. ஓம் வரங்கள் வழங்கும் வாரிதியே போற்றி 
412. ஓம் உலக உயிராம் உன்னதக் காடே போற்றி 
413. ஓம் நான்கு வேத சாரமானாய் போற்றி 
414. ஓம் தத்துவத்தில் ஆனந்தம் கொண்டாய் போற்றி 
415. ஓம் கலிக்குக் கல்வி ஆனாய் போற்றி 
416. ஓம் அங்காரகனுக்கு வீடானாய் போற்றி 
417. ஓம் வலிமையைத் தருவாய் போற்றி 
418. ஓம் விமானத்தை விடாய்க் கொண்டாய் போற்றி 
419. ஓம் வைரத்திற்கு ஒப்பானாய் போற்றி 
420. ஓம் நற்குலத்தின் நாயகா போற்றி
421. ஓம் பிரம்மசாரிகளைக் காப்பாய் போற்றி 
422. ஓம் அந்தணர்களில் சிறந்தாய் போற்றி 
423. ஓம் அந்தணர்களால் பூஜிக்கப்படுவாய் போற்றி
424. ஓம் அலைபோ லசையும் குழலாய் போற்றி 
425. ஓம் பசுக்களின் கண்கள் போன்றவனே போற்றி

426. ஓம் பசுவின் முகத்தை கொண்டாய் போற்றி
427. ஓம் கோலாகலத்துடன் இருப்பவனே போற்றி 
428. ஓம் கபாலங்களை அணிந்தவனே போற்றி 
429. ஓம் பிரமனால் போற்றப்படுவாய் போற்றி 
430. ஓம் மேகங்களாய் வாழ்வாய் போற்றி
431. ஓம் கிரியை புரிவாய் போற்றி 
432. ஓம் பல்தொழில் செழிக்க அருள்வாய் போற்றி 
433. ஓம் விளையாட்டின் தலைவா போற்றி 
434. ஓம் அங்கையில் அழலை உடையாய் போற்றி 
435. ஓம் எட்டாயிரம் அடி அளவு உள்ளாய் போற்றி
436. ஓம் குலாந்தகனே போற்றி 
437. ஓம் பொன்னே போற்றி 
438. ஓம் வேள்வியின் முடிவானவனே போற்றி 
439. ஓம் ஆன்மாவை வீடாகக் கொண்டாய் போற்றி 
440. ஓம் காற்றே போற்றி
441. ஓம் பரத்வாஜ பறவையே போற்றி 
442. ஓம் முக்கால சோதிடனே போற்றி 
443. ஓம் குணக் குன்றாய் போற்றி 
444. ஓம் குணங்களின் நாயகா போற்றி 
445. ஓம் நற்குலத்திற்கு அதிபதியே போற்றி
446. ஓம் செந்நிற ஜோதியாய் போற்றி 
447. ஓம் நலங்களைத் தருபவனே போற்றி 
448. ஓம் பச்சை நிறம் உடையாய் போற்றி 
449. ஓம் பக்தர்களை வளர்ப்பாய் போற்றி 
450. ஓம் தந்தையின் வழியில் செல்பவனே போற்றி

451. ஓம் சிறந்த ஒளியே போற்றி 
452. ஓம் தீயவர்களை அழிப்பாய் போற்றி 
453. ஓம் தூய்மையானவனே போற்றி 
454. ஓம் அழகிய கண்களை உடையாய் போற்றி 
455. ஓம் அடர்த்தியா தலைமுடியை உடையாய் போற்றி
456. ஓம் செங்கழுநீர் மலர்மாலை உடையாய் போற்றி 
457. ஓம் பாம்புகளால் வணங்கப் படுவோய் போற்றி 
458. ஓம் வீரபத்ரனே போற்றி 
459. ஓம் வீரனே போற்றி 
460. ஓம் பெரும் பேச்சாளனே போற்றி
461. ஓம் வயோதிகனே போற்றி 
462. ஓம் ஆடுதலில் நாட்டம் உடையாய் போற்றி 
463. ஓம் வேடன் போல் வேடம் அணிந்தாய் போற்றி 
464. ஓம் திருடர்களை அழிப்பாய் போற்றி 
465. ஓம் பலத்தை அதிகரிப்பாய் போற்றி
466. ஓம் மின்னல் ஒத்த கண்கள் உடையாய் போற்றி 
467. ஓம் சாமரம் கை கொண்டாய் போற்றி 
468. ஓம் ஒளியே போற்றி 
469. ஓம் மென்மையை மனத்தில் மிகுவிப்பாய் போற்றி 
470. ஓம் சிவஒளியே உடையாய் போற்றி
471. ஓம் ஆட்டின் மேல் அமர்ந்தாய் போற்றி 
472. ஓம் மிதிலையின் புதல்வா போற்றி 
473. ஓம் வீடு பேறளிப்பாய் போற்றி 
474. ஓம் மனமே போற்றி 
475. ஓம் மனுஷின் உருவே போற்றி

476. ஓம் மந்திரங்களின் தலைவா போற்றி 
477. ஓம் மந்திரக் கூட்டமே போற்றி 
478. ஓம் பெரும்பலம் பெற்றாய் போற்றி 
479. ஓம் புதனால் புகழப்படுவாய் போற்றி 
480. ஓம் செல்வத்தை தருபவரே போற்றி
481. ஓம் தேவர்களால் வணங்குபவனே போற்றி 
482. ஓம் ஐம்புலனை அடக்குபவனே போற்றி 
483. ஓம் வேள்வியில் விருப்பம் கொண்டாய் போற்றி 
484. ஓம் காலனைக் கண்ணால் அடக்கினாய் போற்றி 
485. ஓம் வேழத்துடன் விளையாடுவாய் போற்றி
486. ஓம் யானை போன்ற கண்ணாய் போற்றி 
487. ஓம் தயிரை விரும்புவாய் போற்றி 
488. ஓம் அடியவர் சுமையை சுமப்பாய் போற்றி 
489. ஓம் தேவதாரு மரம் காப்பாய் போற்றி 
490. ஓம் உடலை அழிப்பாய் போற்றி
491. ஓம் தாமோதரனே போற்றி
492. ஓம் முத்துமாலை அணிந்தாய் போற்றி 
493. ஓம் தட்சிணா மூர்த்தி உருவே போற்றி 
494. ஓம் சந்திரனால் பூஜிப்பவனே போற்றி 
495. ஓம் சங்குக் காதுகள் உடையாய் போற்றி
496. ஓம் சந்திரனைத் தலையில் உடையாய் போற்றி 
497. ஓம் மனுவின் மனம் கவர்ந்தாய் போற்றி 
498. ஓம் யானைக் கவசம் பெற்றாய் போற்றி 
499. ஓம் அர்ச்சுணனே போற்றி 
500. ஓம் குறைவறக் குலநெறி அறிந்தாய் போற்றி

501. ஓம் காலகண்டனே போற்றி 
502. ஓம் வஜ்ர உடல் பெற்றாய் போற்றி 
503. ஓம் குலத்திற்கு பெருமை தந்தாய் போற்றி 
504. ஓம் வம்சத்தின் நாயகா போற்றி 
505. ஓம் ஆனந்த பைரவனால் ஆராதிப்பவனே போற்றி
506. ஓம் அஸ்வமேத யாகபலன் அளிப்பாய் போற்றி 
507. ஓம் விருப்புடன் தயிரன்னம் உண்டாய் போற்றி 
508. ஓம் சர்க்கரைப் பொங்கலை விரும்புவாய் போற்றி 
509. ஓம் நெய்யன்னதை நேயமுடன் உண்பாய் போற்றி 
510. ஓம் திங்களைப் போலத் திகழ்வாய் போற்றி
511. ஓம் கர்வத்தை அழிப்பாய் போற்றி 
512. ஓம் விநாயகரால் பூஜிப்பாய் போற்றி 
513. ஓம் பரவெளி ஆனாய் போற்றி 
514. ஓம் பூதகண நாயகனே போற்றி 
515. ஓம் இடிபோன்ற ஓசை எழுப்புவாய் போற்றி
516. ஓம் சூது இல்லாதத் தூயவனே போற்றி 
517. ஓம் வான்மதிக்கு வரம் தந்தாய் போற்றி 
518. ஓம் நல்லோர்களின் நாயகா போற்றி 
519. ஓம் தேவ குருவே போற்றி 
520. ஓம் அசையும், அசையாப் பொருளே போற்றி
521. ஓம் பொறுமையின் சிகரமே போற்றி 
522. ஓம் கந்தர்வ நாயகனே போற்றி 
523. ஓம் எப்பொதும் ஒளிமயமனவனே போற்றி 
524. ஓம் வீரர்களால் ஆராதிப்பவரே போற்றி 
525. ஓம் சனிபகவானாய் நலம் தருவாய் போற்றி

526. ஓம் வேதங்களின் அங்கமே போற்றி 
527. ஓம் வேதங்களில் வியாபித்தாய் போற்றி 
528. ஓம் மாமலை ஏற மங்கலப்படி ஆனாய் போற்றி 
529. ஓம் பகலவா போற்றி 
530. ஓம் பரம்பொருளுக்கும் பரம் பொருளே போற்றி
531. ஓம் பிரம்மனே போற்றி 
532. ஓம் ஆன்மாவிற்கு அறிவை அறிவித்தாய் போற்றி 
533. ஓம் நோயழித்து நுண்பொருள் தந்தாய் போற்றி 
534. ஓம் சம்சாரக் கடல் கடக்கக் கருவியானாய் போற்றி 
535. ஓம் அறிவுத் தீயை அங்கமாய்க் கொண்டாய் போற்றி 
536. ஓம் அறிவின் உடலே போற்றி 
537. ஓம் மனமகிழ்ச்சியாய் மண்டுவாய் போற்றி 
538. ஓம் நாட்டியத்தில் நாட்டம் கொண்டாய் போற்றி 
539. ஓம் மக்களின் தலைவா போற்றி 
540. ஓம் நர, நாராயணர்களால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி 
541. ஓம் வேடர்குல வேந்தே போற்றி 
542. ஓம் பனிமலையானாய் போற்றி 
543. ஓம் இருளிலிருந்து விடுவிப்பாய் போற்றி 
544. ஓம் கடுஞ்சொல் ஆனாய் போற்றி 
545. ஓம் ஆழ்ந்தப் பீதி அடைந்தாய் போற்றி
546. ஓம் கண்ணின் கருவிழியே போற்றி 
547. ஓம் கருநீல மேனியாய் போற்றி 
548. ஓம் கார்மேகக் கருங்கூந்தல் உடையாய் போற்றி 
549. ஓம் அரிநிகர் கண்ணாய் போற்றி 
550. ஓம் எல்லாத் துயரையும் நீக்குவாய் போற்றி

551. ஓம் சாம வேதத்தில் பற்றுள்ளாய் போற்றி 
552. ஓம் சனகர் முதல் முனிவர் வணங்கப்படுபவனே போற்றி 
553. ஓம் அகில உலகம் ஆனாய் போற்றி 
554. ஓம் ஆறுமுகனே போற்றி 
555. ஓம் நானிலம் போற்றும் நல்லழகா போற்றி
556. ஓம் காட்சிக்கு எளிய கருணையே போற்றி 
557. ஓம் தேவலோகமே போற்றி 
558. ஓம் சந்திர சூடனால் தியானிப்பவனே போற்றி 
559. ஓம் கலிபுருடனுக்கு கருணை காட்டினாய் போற்றி 
560. ஓம் காமதகனம் கண்டாய் போற்றி
561. ஓம் பாபத்தை அழிப்பவனே போற்றி 
562. ஓம் பூமிக்கு அதிபதியே போற்றி 
563. ஓம் உடலின் உற்பவமே போற்றி
564. ஓம் உயர்ந்த மலையில் உறைந்தாய் போற்றி 
565. ஓம் ஏழிசையாய் நின்றாய் போற்றி
566. ஓம் விண்ணுலகத்தின் விண்மீனே போற்றி     
567. ஓம் செந்நிறக் கண் தெய்வமே போற்றி 
568. ஓம் கூரிய பற்கள் கொண்டாய் போற்றி     
569. ஓம் எள்ளை உண்ணும் இறைவா போற்றி 
570. ஓம் எள்ளை வயிற்றில் அடக்கினாய் போற்றி
571. ஓம் தவளை போன்ற காதினாய் போற்றி     
572, ஓம் சிவன் முதலோர்க்கு ஈசனே போற்றி     
573. ஓம் மேருமலை போன்றவனே போற்றி     
574. ஓம் பெருவயிறு பெற்றாய் போற்றி     
575. ஓம் பகலவனும் பைரவனும் பூஜிப்பாய் போற்றி

576. ஓம் மாண்புடை மணியாய் நின்றாய் போற்றி 
577. ஓம் உயிர்க் காற்றானாய் போற்றி 
578. ஓம் கூலத்தில் ஆசை கொண்டாய் போற்றி 
579. ஓம் தேனில் விருப்பம் கொண்டாய் போற்றி
580. ஓம் தாமரைக் கிழங்காய் ஆனாய் போற்றி
581. ஓம் மோகினியின் நாயகனே போற்றி     
582. ஓம் காமனின் கண்ணாய் ஆனாய் போற்றி 
583. ஓம் மாதவா மாலவா போற்றி     
584. ஓம் ஆணவத்தை அழிப்பாய் போற்றி     
585. ஓம் தாமரை வீடாய் கொண்டாய் போற்றி
586. ஓம் மூலக் கல்வியின் மூலமே போற்றி     
587. ஓம் அன்பர்கள் அருகில் அமர்வாய் போற்றி 
588. ஓம் கேடில்லா நாயகா போற்றி     
589. ஓம் சுபமான வாக்கை உடையாய் போற்றி     
590. ஓம் வேள்விக் கருவியை கொண்டாய் போற்றி
591. ஓம் ரத்ன தாமரை மலரை வாழ்வாய் போற்றி     
592. ஓம் மகாபைரவன் போற்றும் மணியே போற்றி     
593. ஓம் புத்தாடை அணிய விரும்புவாய் போற்றி 
594. ஓம் கருங்குயில் குரலை விரும்புவாய் போற்றி 
595. ஓம் புருவத்தின் இடையில் வசிப்பாய் போற்றி
596. ஓம் அழகிய புருவம் உடையாய் போற்றி     
597. ஓம் பரத்வாஜ முனிவரால் பூஜிக்கப் பெற்றாய் போற்றி 
598. ஓம் தாமரைத் தடாகம் தங்குவாய் போற்றி     
599. ஓம் பகலவனே போற்றி     
600. ஓம் அமைதியான சொல்லானாய் போற்றி

601. ஓம் முகந்தனே போற்றி     
602. ஓம் அனைத்து குணங்களின் அமைவிடமே போற்றி 
603. ஓம் நூல்களால் வணங்குவாய் போற்றி     
604. ஓம் குணக் கடலே போற்றி     
605. ஓம் அதிர்ஷ்டமானவனே போற்றி (605)
606. ஓம் செல்வச் செழுங்குன்றே போற்றி     
607. ஓம் வினையழிக்கும் வெப்பமே போற்றி     
608. ஓம் செல்வம் கொடுக்கும் செம்மலே போற்றி     
609. ஓம் உயர் எண்ணம் உடையாய் போற்றி     
610. ஓம் பெரும் பொருளே போற்றி
611. ஓம் மாயையைக் குறைப்பாய் போற்றி     
612. ஓம் சாஸ்த்திரங்களால் வணங்குவாய் போற்றி     
613. ஓம் பரிதியின் அருகில் உள்ளாய் போற்றி     
614. ஓம் வீடு பேற்றை விளைப்பாய் போற்றி     
615. ஓம் மத்தவரி அரக்கனை அழித்தாய் போற்றி
616. ஓம் அண்ட நெருப்பானாய் போற்றி     
617. ஓம் மயில் தோகையை அணிந்தாய் போற்றி     
618. ஓம் ஊனுடல் பெறா உத்தமா போற்றி     
619. ஓம் பாயசப் பிரியனே போற்றி     
620. ஓம் மாதங்களின் மகிமை ஆனாய் போற்றி
621. ஓம் வைர ஆபரணங்களை அணிந்தாய் போற்றி     
622. ஓம் வலிய உடல் பெற்றாய் போற்றி
623. ஓம் மும்மூர்த்திக்கும் மூலவனே போற்றி     
624. ஓம் அழகிய மார்பு பெற்றாய் போற்றி
625. ஓம் அறிஞர் கூட்டம் அமர்ந்தாய் போற்றி

626. ஓம் விசுவரூப தரிசனம் தந்தாய் போற்றி     
627. ஓம் பெருமலை பிறந்தாய் போற்றி     
628. ஓம் இராகுவின் கொட்டம் குறைத்தாய் போற்றி     
629. ஓம் அடியவர் காக்கும் அண்ணலே போற்றி     
630. ஓம் தவத்தின் ஒளியாய்  தங்கினாய் போற்றி 

631. ஓம் துரோணரால் குடமுழக்கு கொண்டாய் போற்றி     
632. ஓம் துரோகிகளை அழிப்பாய் போற்றி     
633. ஓம் அடியவர் துன்பம் சுமப்பாய் போற்றி     
634. ஓம் சிறந்த வீரரை சிறப்பிப்பாய் போற்றி     
635. ஓம் துன்ப வாழ்வைத் துடைப்பாய் போற்றி
636. ஓம் வாகினி, காசினிக்கு நல்வரம் அளித்தாய் போற்றி     
637. ஓம் பிறவிக் கடலைக் கடந்தாய் போற்றி     
638. ஓம் சிறுவனாய் வந்து சிறந்தாய் போற்றி     
639. ஓம் கூற்றுவனின் பாசக்கயிற்றைக் குறைத்தாய் போற்றி 
640. ஓம் ஆசைக் கடலினின்று அகற்றினாய் போற்றி
641. ஓம் விடுதலையைத் தருவாய் போற்றி     
642. ஓம் அறியாமையை அழிப்பாய் போற்றி     
643. ஓம் தானைத் தலைவா போற்றி     
644. ஓம் பேருடலைப் பெற்றாய் போற்றி     
645. ஓம் அக்ரூரனுக்கு வரம் அளித்தாய் போற்றி
646. ஓம் சனிபகவானின் கொடுமைத் தவிர்ப்பாய் போற்றி 
647. ஓம் குறைவில்லாய் போற்றி     
648. ஓம் பாம்பாய் மலையில் கிடப்பாய் போற்றி
649. ஓம் கதிரவன் போன்ற கவர்ச்சியாய் போற்றி   
650. ஓம் அலங்காரப் பிரிய அழகனே போற்றி

651. ஓம் நல்லாசிரியனே போற்றி     
652. ஓம் சுதந்திரமானவனே போற்றி     
653. ஓம் அனைத்துச் சித்தா நந்தமே போற்றி     
654. ஓம் குருவிற்கும் குருவே போற்றி     
655. ஓம் எப்போதும் இன்பம் தருபவரே போற்றி
656. ஓம் அன்பின் உருவே போற்றி     
657. ஓம் இன்பத்தை கொடுத்தவனே போற்றி     
658. ஓம் மாயை உலகில் நின்றாய் போற்றி     
659. ஓம் முத்தியைத் தருவாய் போற்றி     
660. ஓம் முத்தியின் உருவே போற்றி
661. ஓம் மோட்சம் தருவாய் போற்றி     
662. ஓம் செயலின் பலனை தருவாய் போற்றி     
663. ஓம் இசையின் திறமை கொண்டாய் போற்றி     
664. ஓம் செயலானாய் போற்றி     
665. ஓம் அனைத்தும் அறிந்த அண்ணலே போற்றி
666. ஓம் தூய்மையின் உறைவிடமே போற்றி     
667. ஓம் சுவர்க்கத்தின் தலைவா போற்றி     
668. ஓம் கிளிகளை விரும்புவனே போற்றி     
669. ஓம் சோமக் கொடியை விரும்புவாய் போற்றி     
670. ஓம் சுரர்க்கு சுகம் தருவாய் போற்றி
671. ஓம் மலை ஆராதனையில் பற்றுள்ளவனே போற்றி     
672. ஓம் மும்மூர்த்தியாய் விளங்குபவனே போற்றி     
673. ஓம் தீயவர்களை அழிக்கும் தீயே போற்றி     
674. ஓம் பழங்களால் அர்ச்சிக்கப்படுவாய் போற்றி     
675. ஓம் பூஜிக்கப்படுபவனே போற்றி

676. ஓம் ஒய்யார ஒளியே போற்றி     
677. ஓம் பேச்சாற்றல் பெற்ற பெரியோய் போற்றி     
678. ஓம் வீரர்களுக்கு வீரம் தருவாய் போற்றி     
679. ஓம் ஆனை ஏற்றத்தில் ஆசை உள்ளவா போற்றி     
680. ஓம் அடியவர் ஆட்டத்தில் ஆனந்திப்பாய் போற்றி
681. ஓம் தாள ஓசை தந்தாய் போற்றி     
682. ஓம் இலாப நஷ்டம் அற்றாய் போற்றி     
683. ஓம் ஐந்து முகத்தானே போற்றி     
684. ஓம் பரந்த அறிவுடை ஆசானே போற்றி     
685. ஓம் ஐந்து வேள்வி பயனைத் தந்தவனே போற்றி
686. ஓம் கையில் கோடாரியைக் கொண்டவரே போற்றி
687. ஓம் நெருப்பிற்கு ஈசன் ஆனாய் போற்றி     
688. ஓம் மேகநாதமாய் விளங்குவாய் போற்றி     
689. ஓம் பாவத்தின் பகையாய் நின்றாய் போற்றி     
690. ஓம் உயர்மனப் பான்மை உடையாய் போற்றி
691. ஓம் உயிரினங்களுக்குத் தலைவா போற்றி     
692. ஓம் தோல்வியை அழிப்பாய் போற்றி     
693. ஓம் கர்ம வினைகளை களைவாய் போற்றி     
694. ஓம் பகையை அழிக்கும் பகலவா போற்றி     
695. ஓம் விரும்பியது அளிக்கும் விமலா போற்றி
696. ஓம் சுவர்க்கத்தின் ஈசா போற்றி     
697. ஓம் பாவ நாசனே போற்றி     
698. ஓம் எல்லாரும் விரும்பும் பெயராய் போற்றி     
699. ஓம் அமரர்களுடன் இருப்பவனே போற்றி     
700. ஓம் அறிய முடியாதாய் போற்றி

701. ஓம் வேதத்தை விளக்கப் பிறந்தாய் போற்றி     
702. ஓம் மலைமுனி மகிழ்வித்தாய் போற்றி     
703. ஓம் ஐம்பூதம் படைத்தாய் போற்றி     
704. ஓம் ஐம்புலன்களிலும் அமர்ந்தாய் போற்றி
705. ஓம் உலகில் வேறுபட்டு நின்றாய் போற்றி
706. ஓம் திருமாலே போற்றி     
707. ஓம் தாமரை முகத்தாய் போற்றி     
708. ஓம் அகிலத்தை வாழ்விக்கும் அண்ணலே போற்றி
709. ஓம் விரும்பியதைத் தருவாய் போற்றி     
710. ஓம் பொன் வண்ண உடலினாய் போற்றி
711. ஓம் மஞ்சள் பூத்த செந்நிறத்தாய் போற்றி     
712. ஓம் பார்வதியின் புதல்வனே போற்றி     
713. ஓம் சிவப் பரிவார நாயகனே போற்றி     
714. ஓம் அடியவர் பக்தியை அள்ளினாய் போற்றி     
715. ஓம் பரந்த உடலினாய் போற்றி
716. ஓம் குளிர்நிலவாய் நின்றாய் போற்றி     
717. ஓம் சுபமானவற்றைக் கற்பித்தாய் போற்றி     
718. ஓம் தட்சனை அழித்த தயாபரா போற்றி 
719. ஓம் திறமையான கை உடையாய் போற்றி     
720. ஓம் மேலானவனே போற்றி
721. ஓம் காத்யாயனியின் மகனே போற்றி     
722. ஓம் கருடன் மகனே போற்றி     
723. ஓம் அனைவரும் தேடும் அன்பே போற்றி     
724. ஓம் விஷத்தை போக்குவாய் போற்றி     
725. ஓம் கர்வத்தை உடைத்தாய் போற்றி

726. ஓம் தர்பாசனத்தை உடையாய் போற்றி     
727. ஓம் குலம் காக்கும் கோமனே போற்றி     
728. ஓம் சிறப்பின் சிறப்பே போற்றி     
729. ஓம் அநுமனாய் நின்று அருளினாய் போற்றி 
730. ஓம் மக்களின் அதிபதியாய் மலர்ந்தாய் போற்றி
731. ஓம் கர்மாக்களை விரும்பும் காவலா போற்றி     
732. ஓம் ராஜ நாகமாய் நின்றாய் போற்றி     
733. ஓம் பரந்த உடலைப் பெற்றாய் போற்றி     
734. ஓம் திவாகரனே  போற்றி     
735. ஓம் சண்ட வாத்தியம் விரும்புவாய் போற்றி
736. ஓம் எண்ண முடியா எண்ணே போற்றி     
737. ஓம் பெரும்படை ஆனாய் போற்றி     
738. ஓம் நல்லோரைக் காக்கும் நல்லுடலாய் போற்றி     
739. ஓம் மாசற்ற மனத்தாய் போற்றி     
740. ஓம் சுற்றுதலை விரும்புவாய் போற்றி
741. ஓம் பண்புடைப் புலவனாய் நின்றாய் போற்றி     
742. ஓம் வெள்ளிமலை அழகா போற்றி     
743. ஓம் இருளைப் போக்கும் ஈசா போற்றி     
744. ஓம் ஆதவனின் அருட் கதிரே போற்றி     
745. ஓம் நீல வண்ண ஒளியே போற்றி
746. ஓம் சந்தனாபிஷேகப் பிரியனே போற்றி     
747. ஓம் திருமகள் புதல்வா போற்றி     
748. ஓம் வில்வித்தையில் வல்லவா போற்றி     
749. ஓம் அரக்கு வண்ணம் உடையாய் போற்றி     
750. ஓம் அழகான காதுகளுடையாய் போற்றி

751. ஓம் இரவை நீக்கும் இறைவா போற்றி     
752. ஓம் தண்ணீர்த் துளியாய் நின்றாய் போற்றி
753. ஓம் அம்பிகைப் புதல்வா அழகனே போற்றி 
754. ஓம் உறவினை வளர்க்கும் உண்மையே போற்றி     
755. ஓம் சேனைத் தலைவனாய்த் திகழ்ந்தாய் போற்றி
756. ஓம் அபர்னாவின் அன்பனே போற்றி     
757. ஓம் மலையின் நடுவே நின்றாய் போற்றி     
758. ஓம் விரதப் பலன் தந்தாய் போற்றி     
759. ஓம் காற்றுத் தேவனால் வணங்கினாய் போற்றி 
760. ஓம் நல்ல பெருமை உடையாய் போற்றி
761. ஓம் உச்சியில் வீட்டை உடையாய் போற்றி
762. ஓம் சுகத்தை விரும்புவாய் போற்றி     
763. ஓம் நீண்ட ஆயுள் தருவாய் போற்றி     
764. ஓம் குற்றமற்ற குணத்தினாய் போற்றி     
765. ஓம் தூதுவனே போற்றி
766. ஓம் ஆயுர்வேதத்தில் பற்றுள்ளாய் போற்றி     
767. ஓம் யோகியே போற்றி     
768. ஓம் துறவியாய் மலையில் நின்றாய் போற்றி     
769. ஓம் திகம்பரத் துறவியின் குழலினாய் போற்றி     
770. ஓம் குதிரை வேகமுடையாய் போற்றி
771. ஓம் குதிரையின் எண்ணம் கொண்டாய் போற்றி 
772. ஓம் அஸ்வமேத யாகபலன் தருவாய் போற்றி     
773. ஓம் நன்முகத்தை உடையாய் போற்றி     
774. ஓம் துர்முக அரக்கனைக் கொன்றாய் போற்றி     
775. ஓம் தடங்கலை நீக்கும் தயாபரா போற்றி

776. ஓம் தடங்கலற்றத் தலைவா போற்றி     
777. ஓம் மாயையை நீக்கும் மகேசா போற்றி     
778. ஓம் மதிப்புள்ள மாயவனே போற்றி     
779. ஓம் நாதமாய் நல்லிசையாய் நின்றாய் போற்றி     
780. ஓம் அர்யமாவின் ஒளியாய் அமைந்தாய் போற்றி
781. ஓம் அர்ச்சுணனே போற்றி     
782. ஓம் பார்வதிப் பிரியனே போற்றி     
783. ஓம் பகைவனை அழித்த பரம் பொருளே போற்றி
784. ஓம் மேகவண்ண கண்டனே போற்றி 
785. ஓம் மணிமகுடமே போற்றி
786. ஓம் கோடைக்கால சூரியனே போற்றி     
787. ஓம் வேதத்தின் விதியை அறிந்தாய் போற்றி     
788. ஓம் மோட்ச அறிவே போற்றி     
789. ஓம் நல்லறிவை நல்குவாய் போற்றி     
790. ஓம் மும்மூர்த்தியின் பகையை முடித்தாய் போற்றி
791. ஓம் வீரமார்த்தாண்டனுக்கு வரம் தந்தாய் போற்றி     
792. ஓம் வீரமான தோளை உடையாய் போற்றி     
793. ஓம் மூத்தவனே போற்றி     
794. ஓம் வீர சிங்காதனத்தில் வீற்றிருந்தாய் போற்றி     
795. ஓம் அகண்ட அறிவாளியே போற்றி
796. ஓம் வீரச் செயல்களை செய்தாய் போற்றி     
797. ஓம் அசுரர்களுக்கு ஆயுதமானாய் போற்றி     
798. ஓம் மனிதர்க்கும், மறவர்க்கும் நட்பானாய் போற்றி     
799. ஓம் நாகமணி அணிந்தாய் போற்றி     
800. ஓம் சொற்களின் நாயகா போற்றி

801. ஓம் தேவலோக குருவே போற்றி     
802. ஓம் ஆதியும் அந்தமும் ஆளாய் போற்றி     
803. ஓம் நல்லவர்களை வாழ்விக்கும் நாயகா போற்றி     
804. ஓம் போரில் சிறந்த வீரனே போற்றி     
805. ஓம் உமா புத்ரனே போற்றி
806. ஓம் நட்சத்திர மண்டலத்தின் நாயகா போற்றி     
807. ஓம் அலங்காரப் பிரியனே போற்றி     
808. ஓம் சிந்தூரத் திலகத்தாய் போற்றி     
809. ஓம் குங்கும நிறத்தைக் கொண்டாய் போற்றி     
810. ஓம் காலகேயனை அழித்தாய் போற்றி
811. ஓம் மதங் கொண்ட யானையை மாய்த்தாய் போற்றி     
812. ஓம் மூலப்பொருளே முதலே போற்றி     
813. ஓம் நாக. கந்தர்வ பூஜிதாய் போற்றி     
814. ஓம் நல்லாசனே போற்றி     
815. ஓம் அன்பாய், அறிவாய் நின்றாய் போற்றி
816. ஓம் கௌரியின் தீக்கனா களைந்தாய் போற்றி     
817. ஓம் கவலையின் கூட்டம் கலைத்தாய் போற்றி     
818. ஓம் சிந்தாமணியை அணிந்தாய் போற்றி     
819. ஓம் அண்ட சராசரத்தின் ஐயா போற்றி     
820. ஓம் சரத் குண்டல காதுடன் பிறந்தாய் போற்றி
821. ஓம் மல்லிகை மலர் போன்ற முகத்தோய் போற்றி     
822. ஓம் செல்வத்தின் செல்வமே போற்றி     
823. ஓம் இருவகை நிதியை இயம்பினாய் போற்றி     
824. ஓம் ஆரத்தியில் மனம் மகிழ்ந்தாய் போற்றி     
825. ஓம் நீரைப்போல கண்கள் உடையாய் போற்றி
826. ஓம் வாழ்வியல் நெறியை வழங்கினாய் போற்றி
827. ஓம் கேதார மலையின் ஈசனே போற்றி     
828. ஓம் வில்வித்தை வேடனே போற்றி     
829. ஓம் காலத்தின் காலமே போற்றி     
830. ஓம் காலமே உருவாய் நின்றாய் போற்றி
831. ஓம் கல்பத்தின் பைரவனால் கவர்ந்தாய் போற்றி     
832. ஓம் கழுகின் இறகாலான அம்புடையாய் போற்றி     
833. ஓம் வளர்பிறை மதியே போற்றி     
834. ஓம் நாளாய், மாதமாய், ஆண்டாய் ஆனாய் போற்றி     
835. ஓம் சூரிய மண்டலத்தில் வசிப்பாய் போற்றி
836. ஓம் இந்திர பூஜை பெற்றாய் போற்றி     
837. ஓம் கர்மா யோகியே போற்றி     
838. ஓம் ஐம்பது வண்ண உரு ஆனாய் போற்றி     
839. ஓம் வேதனையை குறைப்பாய் போற்றி     
840. ஓம் சித்தத்தைக் கவர்ந்தாய் போற்றி
841. ஓம் அழகிய பாலனே போற்றி     
842. ஓம் பலராமனே போற்றி     
843. ஓம் வேங்கை மலரே போற்றி     
844. ஓம் கர்வத்தை அடக்கும் கண்ணியனே போற்றி     
845. ஓம் அறிஞர்களின் சிறந்த அறிவே போற்றி
846. ஓம் விராதனைக் கொன்ற வீரனே போற்றி     
847. ஓம் காப்பியத்தின் கருவாய் நின்றாய் போற்றி     
848. ஓம் மனித இலக்கியமாய் மலர்ந்தாய் போற்றி     
849. ஓம் இசையில் பற்று உள்ளாய் போற்றி     
850. ஓம் கம்பீரமாய் கர்ஜனை செய்தாய் போற்றி

851. ஓம் மலையின் மகிமை ஆனாய் போற்றி     
852. ஓம் தோத்திரத்தை விரும்பும் தூயவனே போற்றி 
853. ஓம் அடைய முடியாத அற்புதமே போற்றி     
854. ஓம் கருவண்டு போன்ற கண்ணனே போற்றி     
855. ஓம் தாமரையில் தோன்றிய தயாபரா போற்றி
856. ஓம் பாலகுந்தனால் பரவினாய் போற்றி     
857. ஓம் வாகை மலரை விரும்புவாய் போற்றி 
858. ஓம் பாலைமரம் போல் ஒளியினாய் போற்றி     
859. ஓம் பயத்தைப் போக்கும் பண்பாளா போற்றி     
860. ஓம் தத்துவமே போற்றி
861. ஓம் தத்துவத்தின் பொருளைத் தந்தவனே போற்றி     
862. ஓம் மூத்தவனே போற்றி     
863. ஓம் பாருலகைப் படைத்தாய் போற்றி     
864. ஓம் தத்துவமாய் மக்கள் தரிசிப்பாய் போற்றி     
865. ஓம் ஐம்புலன்களுக்கும் முதல்வா போற்றி
866. ஓம் உடலுக்கு மூலக்காரணமானாய் போற்றி     
867. ஓம் தத்துவத்தின் மூலப்பொருளே போற்றி     
868. ஓம் ஆதி நாதனே போற்றி     
869. ஓம் குறையாத பலன் தரும் கரத்தாய் போற்றி     
870. ஓம் பிறப்பை வெற்றி கண்டாய் போற்றி
871. ஓம் இசையில் விருப்பம் கொண்டாய் போற்றி     
872. ஓம் இயற்றமிழ் நாட்டம் வேட்டாய் போற்றி     
873. ஓம் மாமலை வாசா போற்றி     
874. ஓம் தடங்கல் இல்லா உள்ளம் உடையோய் போற்றி 
875. ஓம் திருமுலை பாலுண்ட குழந்தாய் போற்றி

876. ஓம் மலையரசன் ஆசியால் பிறந்தாய் போற்றி     
877. ஓம் அமுதக் குடத்தை கையில் கொண்டாய் போற்றி     
878. ஓம் ஆசை கடலை அகற்றினாய் போற்றி     
879. ஓம் பழமையானவனே போற்றி     
880. ஓம் அமுதத் தாமரை முகத்தாய் போற்றி
881. ஓம் கற்பக மரத்தின கனியே போற்றி     
882. ஓம் பலவகை மணியைப் பூண்டாய் போற்றி     
883. ஓம் இராவணன் பூஜித்த தேவா போற்றி     
884. ஓம் காலனை வென்றாய் போற்றி     
885. ஓம் கிரவுஞ்ச மலையின் மமதை அழித்தாய் போற்றி
886. ஓம் ஆயுர் வேதப் பலனைத் தந்தாய் போற்றி     
887. ஓம் எல்லா மக்களையும் விரும்புவாய் போற்றி     
888. ஓம் வெண்பட்டால் உடலை மறைத்தாய் போற்றி     
889. ஓம் முத்துமாலையை அணிந்தாய் போற்றி     
890. ஓம் தாழம்பூவைத் தரித்தாய் போற்றி
891. ஓம் யானைக்கூட்டத்துடன் இருப்பாய் போற்றி 
892. ஓம் மயிலின் குரலை விரும்புவாய் போற்றி     
893. ஓம் கார்த்திகேயனே போற்றி     
894. ஓம் மான் வேட்டையில் மகிழ்வாய் போற்றி     
895. ஓம் சாதகாலனுக்கு இன்பம் தந்தாய் போற்றி
896. ஓம் கவரிமான் பூஜையால் களித்தாய் போற்றி 
897. ஓம் மாமரச் சோலையில் திரிந்தாய் போற்றி     
898. ஓம் வேதத்தின் பலனைத் தருபவனே போற்றி 
899. ஓம் 'ஐந்திரம்' என்ற நூலை உணர்ந்தாய் போற்றி 
900. ஓம் கண் நோயை அழிப்பவனே போற்றி

901. ஓம் பாற்கடல் வாசனால் பூஜித்தாய் போற்றி     
902. ஓம் காண்போர் விரும்பும் அழகா போற்றி     
903. ஓம் முனிவர் மனம் மகிழசெய்வாய் போற்றி     
904. ஓம் தைலக்காப் பணிந்த தலைவா போற்றி     
905. ஓம் தர்ஜனி முத்திரைக் காட்டினாய் போற்றி
906. ஓம் தாமரைத் தடாகம் விரும்புவாய் போற்றி     
907. ஓம் தமோ குணத்தை தவிர்ப்பாய் போற்றி     
908. ஓம் நோயற்றவனே போற்றி     
909. ஓம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாய் போற்றி     
910. ஓம் பொன்னின் வண்ணம் பெற்றாய் போற்றி
911. ஓம் தீய ஆசைகளை எரித்தாய் போற்றி     
912. ஓம் ஆறு குணங்களைக் கொண்டாய் போற்றி     
913. ஓம் ஏழுகுதிரை வாகனனால் வணங்கினாய் போற்றி     
914. ஓம் துன்பத்தை துடைப்பாய் போற்றி     
915. ஓம் தெளிவான அறிவைப் பெற்றாய் போற்றி
916. ஓம் எழுவகைப் பிறப்பிற்கும் பெருமை தந்தாய் போற்றி
917. ஓம் மூலக்கனலே போற்றி     
918. ஓம் முக்கண்ணனே போற்றி     
919. ஓம் மூன்றாற்றின் முழுப்பலனைத் தந்தாய் போற்றி     
920. ஓம் கார்மேக வண்ணமே போற்றி
921. ஓம் நான்கு வேதத்தின் நல்முகமே போற்றி
922. ஓம் நடுக்காட்டில் தங்கும் நாயகா போற்றி 
923. ஓம் தாமரைப்பாதத்தில் சலங்கை பெற்றாய் போற்றி     
924. ஓம் வீரக்காப்புடன் விளங்கும் கரத்தாய் போற்றி     
925. ஓம் உலகையே உடலாய் ஆனாய் போற்றி

926. ஓம் தூயமுகத்துடன் தோன்றினாய் போற்றி     
927. ஓம் திருநீற்றில் திளைப்பாய் போற்றி     
928. ஓம் சும்பத் அரக்க குலத்தால் வழிபட்டாய் போற்றி     
929. ஓம் 'ரகதகும்ப' குலம் அழித்தாய் போற்றி     
930. ஓம் நிஷாத ஸ்வரத்தை விரும்புவாய் போற்றி
931. ஓம் நமஸ்காரப் பலனைத் தருவாய் போற்றி     
932. ஓம் வில்லினால் பக்தரை காப்பாய் போற்றி     
933. ஓம் அம்பு ஆயுதத்துடன் தயார் நிலையில் உள்ளாய் போற்றி
934. ஓம் மந்திரத்தினால் அச்சம் தவிர்த்தாய் போற்றி
935. ஓம் குப்ஜிகா மந்திர உருவமே போற்றி
936. ஓம் மன அழுக்கைப் போக்குவாய் போற்றி     
937. ஓம் அதிகமான ஒளியை உடையாய் போற்றி     
938. ஓம் இராவண வதம் செய்தாய் போற்றி     
939. ஓம் 'ஆசுகா' ஆயுதம் கையில் உடையாய் போற்றி     
940. ஓம் காதாயுகத்தைக் கையில் கொண்டாய் போற்றி
941. ஓம் கோடாரியைக் கையில் கொண்டாய் போற்றி     
942. ஓம் காரணமாய் உலகில் வந்தாய் போற்றி     
943. ஓம் தன்னிச்சையானவனே போற்றி     
944. ஓம் கபாலமாலைக் கழுத்தில் அணிந்தாய் போற்றி     
945. ஓம் ஆயிரம் உருவம் கொண்டாய் போற்றி
946. ஓம் ஆயிரம் கண்கள் உடையாய் போற்றி     
947. ஓம் பலவகை ஆயுதங்கள் கொண்டாய் போற்றி     
948. ஓம் என்புமாலை அணிந்தாய் போற்றி     
949. ஓம் நீல நிற உடலைப் பெற்றாய் போற்றி     
950. ஓம் புலிக்குப் பலாபலனைத் தந்தாய் போற்றி

951. ஓம் ரத்ன செங்கணாய் போற்றி     
952. ஓம் பன்னிரெண்டு நாள் யாகப் பிரியனே போற்றி     
953. ஓம் உடல் வளம் பெற வேள்வியானாய் போற்றி     
954. ஓம் தூக்கம் முதலான பலனைத் தருவாய் போற்றி     
955. ஓம் பசுக்களை அடைய வரம் தந்தாய் போற்றி
956. ஓம் வாஜபேய வேள்வியின் தேவதையை போற்றி     
957. ஓம் ஹரிஹரர்களின் ஆத்ம தோன்றலே போற்றி     
958. ஓம் சண்பக மலரை விரும்புவாய் போற்றி     
959. ஓம் மிருகங்களின் கூட்டத்தை பிரிப்பாய் போற்றி
960. ஓம் சாத்திரங்களின் நாயகா போற்றி
961. ஓம் மோட்ச வழிக்கு அறிவைத் தந்தாய் போற்றி
962. ஓம் சாத்திரங்களுக்கும் மேலானவனே போற்றி     
963. ஓம் நெருப்பிற்கும் ஒளியைத் தந்தாய் போற்றி     
964. ஓம் வேள்விக் குண்டத்தின் நாயகா போற்றி     
965. ஓம் குடத்தைக் கையில் கொண்டாய் போற்றி
966. ஓம் குங்கப்பூ மண நெற்றி கொண்டாய் போற்றி     
967. ஓம் எரிமேலியில் இருப்பாய் கொண்டாய் போற்றி     
968. ஓம் சிங்க முக அசுரனை அழித்தாய் போற்றி     
969. ஓம் குயிலின் குரலை விரும்புவாய் போற்றி     
970. ஓம் காலனை அழிக்க விரும்புவாய் போற்றி
971. ஓம் தர்க்க சாத்திரக் கொள்கையை கடிந்தாய் போற்றி     
972. ஓம் சங்கம் வென்றாய் போற்றி     
973. ஓம் தங்கத் தாமரை கையில் கொண்டாய் போற்றி     
974. ஓம் வேள்வியில் மகிழ்ந்தாய் போற்றி     
975. ஓம் தந்தைக்கு வேள்வியில் உதவினாய் போற்றி

976. ஓம் விதேக மக்களை காத்தவனே போற்றி     
977. ஓம் வேத விளக்கங்களில் விருப்பம் உடையாய் போற்றி     
978. ஓம் தயிரில் நெய்யைப் பிரிப்பாய் போற்றி
979. ஓம் மகாசூரனை அழிக்க முயன்றாய் போற்றி     
980. ஓம் ஆயுதத்திற்கு மறு ஆயுதம் கொடுத்தாய் போற்றி
981. ஓம் பெருமழையை தடுத்து காத்தாய் போற்றி     
982. ஓம் கையில் நாகாபரணம் கொண்டாய் போற்றி     
983. ஓம் வேள்வியானவனே போற்றி     
984. ஓம் இசையில் முதலெழுத்தை இயம்பினாய் போற்றி     
985. ஓம் பூமிக்கு சமமான கண்டத்தை உடையாய் போற்றி
986. ஓம் குவலயத்தை அனைய கரத்தாய் போற்றி     
987. ஓம் தந்தியை மீட்டும் தங்கக் கரத்தாய் போற்றி     
988. ஓம் இசையில் மயங்கும் இயல்பினாய் போற்றி     
989. ஓம் பதினெட்டு படியின் அதிபதியே போற்றி     
990. ஓம் மல்லிகைப் பூவில் வாழ்வாய் போற்றி 
991. ஓம் மணி கூடமலையில் வாழ்வாய் போற்றி     
992. ஓம் விளையாட்டாய் வினை செய்வாய் போற்றி     
993. ஓம் மகாதேவனின் ஆணையை மதிப்பாய் போற்றி     
994. ஓம் மதியின் ஒளியைப் பெற்றாய் போற்றி     
995. ஓம் வேள்வி பலனைத் தந்தாய் போற்றி
996. ஓம் மைநாக மலையில் வாழ்வாய் போற்றி     
997. ஓம் மது அரக்கனின் குலத்தை அழித்தாய் போற்றி     
998. ஓம் தாலகண்ட புரத்தில் வசிப்பவனே போற்றி     
999. ஓம் இருளைப் போக்கும் ஒளியே போற்றி     
1000. ஓம் சபரிகிரி வாஸனே போற்றி

 

Follow us:

By Makarajothi.faith. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • X
  • YouTube
bottom of page